Pathi Rajyam tamil novel is a collection of five short stories which contains 30 pages, you can read it quickly. From the short stories, Palam story is a controversial psychological thriller and the last one is a sociological drama. It’s one of the best novels from the early work by writer Sujatha.
Pathi rajyam By Sujatha
'பாதி ராஜ்யம்' குறுநாவல் வடிவில் ‘குமுதம்’ இதழின் ஒரு சிறப்பிதழில் முதலில் வெளிவந்தது. கணேஷ் கதாபாத்திரத்தை வைத்து 'நைலான் கயிறு'க்குப் பின்தொடர்ந்து எழுதிய குறுநாவல். இன்னும் கணேஷ் முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்தும் அதே இளமையுடன் புதிய புதிய குற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
சின்ன knotதான். நீரஜா என்று ஒரு க்ளையண்ட். அவரது அப்பா ஒரு கொலைக்கேசில் ப்ளாக்மெய்ல் செய்யப்படுகிறார். கணேஷ் எப்படி knotஐ அவிழ்க்கிறார் என்று சொல்லிவிட்டால் அப்புறம் கதையை படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் மிச்சத்தை காகிதத்தில் காண்க. தன்னை காப்பாற்றிய கணேஷுக்கு பாதி ராஜ்யம் தருவதாக அப்பா சொல்ல, கணேஷ் நீரஜாவை பார்க்கிறார். நல்ல வேளையாக கல்யாணம் கில்யாணம் ஆகாமல், நீரஜா அவருக்கு அசிஸ்டன்டாக அடுத்த கதையில் (ஒரு விபத்தின் அனாடமி) வருகிறார்.
டெல்லியின் ஜியாக்ரஃபி, முக்கியமாக ரோடுகள் பேசப்படுகின்றன. நாற்பது வருஷங்களில் எல்லாம் மாறிப் போயிருக்கும். கணேஷிடம் கொஞ்சம் வசந்தின் குணங்கள் தெரிகின்றன. முக்கியமாக கணேஷ் சைட் அடித்த ஒரே பெண் நீரஜாவாகத்தான் இருக்கும். பழைய நாவல்கள் – அனிதா இளம் மனைவி, நைலான் கயிறு இதையெல்லாம் திருப்பி படித்த பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும்.
இந்த கதையும், ஒரு விபத்தின் அனடாமியும் “பாதி ராஜ்யம்” என்ற தொக்குப்பில் கிடைக்கின்றன. நான் சான் ஹோசே நூலகத்தில் எடுத்து படித்தேன்.
இந்தக் குறுநாவல் இருக்கும் மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்
வகை | : | குறுநாவல் (KuruNovel) |
எழுத்தாளர் | : | சுஜாதா (Sujatha) |
பதிப்பகம் | : | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
ISBN | : | 9788184936667 |
Pages | : | 168 |
பதிப்பு | : | 1 |
Published Year | : | 2013 |
Source: https://siliconshelf.wordpress.com/