Visit Here
Novel Summary: ஜி.யெஸ், ஒரு ப்ரிலான்ஸ் போட்டோகிராபர். அருணா என்கிற ஒரு குட்டி சினிமா நடிகையை புகைப்படம் எடுப்பதற்காகச் செல்கிறான். அவளுடன் பேசிப் பழகி அவளது புத்திசாலித் தனத்தால் ஈர்க்கப்படுகிறான். இரண்டு நாள் சந்திப்பிலேயே இருவரும் காதல் வயப்பட்டு கல்யாணம் வரை பேசிக்கொள்கிறார்கள். கல்யாணத்துக்குத் தடையாக அருணாவின் வாழ்க்கையில் ஒரு சிக்கல் இருக்கிறது. உடனடியாக அதைக் களைந்து விட்டு விருவதாகச் சொல்லிச் செல்கிறாள் அருணா. ஜி.யெஸ் காத்திருக்கிறான். அருணா வராததால் அவளைத் தேடித் செல்கிறான். எதிர்பாராத அதிர்ச்சி அவனைத் தாக்குகிறது.
'தேடாதே' ரசிக்கும்படி இருந்தது. கடைசிவரை யார் என்று சொல்லாமல் நாளை பேப்பரை பார்த்து தெரிந்துக் கொள்ள சொல்கிறார். நானும் மூன்று நாளாய் பேப்பர் பார்க்கிறேன். இன்னும் புரியவில்லை.
எல்லாக் கதைகளிலும் ஒரு குட்டி சம்பவத்தை வைத்து, எத்தனை அழகாய் கதை வளர்க்கலாம் என்று ஆரம்ப கால எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது. கதை முழுதும் பேச்சுகளால் நிரப்பப்பட்டிருந்தாலும், ஒரு தேர்ந்த எழுத்து என்பது என்ன என்று கற்றுக்கொள்ள முடிகிறது. கதை விறுவிறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது என்று சொல்ல இயலாது. ரசிக்கலாம். ரசித்தேன்.

Source:
http://www.noolulagam.com/
http://www.noolulagam.com/
http://minminipoochchigal.blogspot.com/